உலகில் இது எல்லாம் நடக்கும் என்று முன்பே கணித்த பிரான்சை சேர்ந்த கணிப்பாளர் நாஸ்ட்ராடமஸ் வரவிருக்கும் 2020-ஆம் ஆண்டில் உலகில் என்னெவெல்லாம் நடக்கும் என்பதை கணித்துள்ளார்.
பிரான்ஸை சேர்ந்தவர் நாஸ்ட்ராடமஸ், இவர் ஜோதிடரோ, சாமியாரோ கிடையாது, சாதரண மனிதன் போன்றவர் தான், இருப்பினும் ஒரு சிலருக்கு முன்பு நடப்பதை இப்போதே அறியமுடியும், அது போன்று தான் நாஸ்ட்ராடமஸ் தன்னுடைய காலத்தில் உயிரோடு(1503-1566) இருக்கும் உலகில் இதுவெல்லாம் நடக்கும் என்று கணித்துள்ளார்.
அப்படி அவர் கணித்த பிரித்தானியா ராணி டயானாவின் மரணம், ஹிட்லரின் எழுச்சி, அணுகுண்டு, இரண்டாம் உலகப் போர், அமெரிக்க ஜனாதிபதியாவார் டிரம்ப், அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் என பல விஷயங்களை துல்லியமாக கணித்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது 2019-ஆம் ஆண்டு முடிந்து 2020-ஆம் ஆண்டு வரவுள்ள நிலையில், வரும் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கும் என்று அவர் கணித்துள்ளார் என்பது குறித்து வெளியாகியுள்ளது.
அதில், 2020-ஆம் ஆண்டின் துவக்கத்திலே பல நாடுகளுக்கிடையே மோதல்கள் அதிகரிக்கும், இதன் காரணமாக மிகப் பெரிய பொருளாதர நெருக்கடி ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
- அதே போன்று இந்த ஆண்டில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள், ஏனெனில் ஒரு புதிய வகையான ஆன்மீகத்தை அவர்கள் காண்பார்கள்.
- இந்த ஆண்டு மூன்றாம் உலகப்போர் நடப்பது சாத்தியம் என்பதை கூற முடியும், உதாரணமாக அமெரிக்கா ஆசியாவில் மிகப் பெரிய இராணுவப் பயிற்சியைத் தொடங்குவதை பார்க்க முடியும்.
- உலகில் இருக்கும் பெரிய நகரங்களில் உள்நாட்டு போர் போன்ற நிலைகள் ஏற்படலாம், மக்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள்.
- 2020 மிகவும் வன்முறை ஆண்டாகவே இருக்கும், ரஷ்ய ஜனாதிபதி புடின் படுகொலை செய்ய முயற்சி நடக்கும், அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் மிகப் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
- பிரித்தானியாஇல் 70 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரும் சோகம் ஏற்படலாம், அது பிரித்தானியா மகாராணியின் மரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் வல்லுநர்கள் ஏராளமானோர் - பொருளாதாரத்தில் சில பில்லியன் பவுண்ட்களை இழப்பார்கள், காலநிலை மாற்றம் உலகம் முழுவதையும் பாதிக்கும்.
- உலகின் சில பகுதிகளில், இந்த ஆண்டு கடுமையான புயல்கள் மற்றும் பூகம்பங்கள் ஏற்படும், பின்னர் வெள்ளம் மற்றும் பயங்கரவாதம் அழிவின் காட்சியை பார்க்க முடியும்.
- மத்திய கிழக்கு நாடுகளிலும், உலகின் வேறு சில பகுதிகளிலும் மத தீவிரவாதம் அதிகரிக்கும், இதனால் அமைதியின்மை மற்றும் உள்நாட்டு போர் ஏற்படும். பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் இருப்பர்.
இது போன்று இவர் பல உலக நடப்புகளை கணித்துள்ளதாகவும், அதில் சில விஷயங்களை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.