Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க!…. ‘கூகுள் பே’ மூலம் வழிப்பறி?…. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் பிரின்ஸ் என்பவர் தனது மூன்றாவது ஆண்டு கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் பிரின்ஸ் சென்னையில் உள்ள கல்லூரிக்கு கடலூரில் இருந்து காரில் சென்றுள்ளார். இதையடுத்து கார் அனுமந்தை சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது அவரது காரை ஐந்து நபர்கள் வழிமறித்து லிஃப்ட் கேட்டிருக்கின்றனர். அதன் பிறகு பிரின்ஸ் அதில் 3 பேருக்கு மட்டும் காரில் லிஃப்ட் கொடுத்துள்ளார்.

பின்னர் காரை விட்டு இறங்கும் மூன்று பேரும் திடீரென பிரின்ஸுடன் சேர்த்து காரையும் கடத்தி சென்றிருகின்றனர். அதனைத் தொடர்ந்து மரக்காணம் தீர்த்தவாரி சாலை அருகே கார் சென்ற போது அந்த கும்பல் பிரின்ஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அப்போது அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த கும்பலோ “கூகுள் பே” மூலம் தங்களுக்கு பணத்தை அனுப்பும்படி மிரட்டி இருக்கின்றனர்.

பின்னர் மூன்று பேரின் கூகுள் எண்ணுக்கும் பிரின்ஸ் தலா ரூ.10 ஆயிரம் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து அந்த கும்பல் பிரின்ஸை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பிரின்ஸ் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் கூகுள் எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில் சிக்கிய மரக்காணம் பகுதியை சேர்ந்த அஜீத் குமார், சவுபர் சாதிக், வினோத் சேகர் மற்றும் பாலமுருகன் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின்னர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |