Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த டேங்கர் லாரி…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டேங்கர் லாரி பக்தர்கள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் அதிவேகமாக டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ஈரோட்டிலிருந்து முருக பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக பக்தர்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவரான சிவகங்கை மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் வசிக்கும் முத்தையா என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி பகுதியில் வசிக்கும் முருக பக்தர்கள் விக்னேஷ், விஷ்ணு, கவுசிக், விக்கி ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |