Categories
கல்வி மாநில செய்திகள்

இப்படியா ? பண்ணுவீங்க….. ”ஷாக் கொடுத்த கல்வித்துறை”….. ShareChat_டில் வினாத்தாள்…!!

முன்கூட்டியே வெளியான கேள்வித் தாள்களை வைத்து பள்ளிக் கல்வித் துறை தேர்வினை நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரையாண்டுத் தேர்வின் கடைசி நாளான இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வும், 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயிரியல் தேர்வும் காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மூன்று பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் முழுமையாக சமூக வலைதளத்தில் நேற்றிரவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

question paper out

சமூக வலைதளங்களில் வெளியான கேள்வித்தாள்

சமூக வலைதளத்தில் வெளியான கேள்வித்தாள்களில், அந்த நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் துணை இல்லாமல் இது போன்று முன்கூட்டியே கேள்வித்தாள்கள் வெளியாக வாய்ப்புகள் இல்லை. அரையாண்டுத் தேர்விற்கான வினாத்தாள்களையே பாதுகாப்பான முறையில், அளிக்க முடியாத கல்வித்துறை முழு ஆண்டுத் தேர்வினை எவ்வாறு நடத்தப் போகிறது எனக் கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு ஆப் மூலம் 9ஆம் வகுப்பு தமிழ், 12ஆம் வகுப்பு வேதியியல் வினாத்தாள்கள் ஏற்கனவே வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதே செயலியில் இன்றையத் தேர்வு கேள்வித்தாள்களும் தற்போது வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கல்வித்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், மீண்டும் கேள்வித்தாள்கள் வெளியாகியிருப்பது கல்வித்துறையை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முன்னதாக, கடந்த 13ஆம் தேதியிலிருந்து மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.

Categories

Tech |