நாட்டில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.1 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நேற்று தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் கடந்த 2019ஆம் வருடம் மக்களைவைத் தேர்தலில் 91.2 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 4.3 சதவீதம் அதிகரித்து 95.1 கோடியாக உயர்ந்துள்ளது. 47.3 கோடி ஆண் வாக்காளர்களில் 3.6 சதவீதம் அதிகரித்து 49 கோடியாகவும் , 43.8 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையானது கடந்த 3 வருடங்களில் 5.1 சதவீதம் அதிகரித்து 46.1 கோடியாகவும் உயர்ந்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.