அமெரிக்காவில் 3.36 கோடி விற்பனைக்கு வந்த வீட்டில் நான்கு கழிப்பறைகள் இருப்பது பலரை கவர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் விஸ்கான்சின் என்னும் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் 6 படுக்கையறைகள், முழு வசதியுடன் 2 குளியலறைகள், பாதி வசதியுடன் 2 குளியலறைகள் என்று மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த வீட்டின் முக்கிய அம்சமே கழிப்பறைகள் தான். அதாவது ஒரு பாத்ரூமுக்கு 4 கழிப்பறைகள் இருக்கிறது.
அதிலும் எந்த தடுப்பு சுவரும் இன்றி, சிறிய இடைவெளிகளில் நாற்காலிகள் போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் குளியலறையில் நான்கு சிங்க்குகள் இருக்கிறது. இந்த சிறப்புமிக்க வீடு கடந்த 1851 ஆம் வருடத்தில் முதல் முறையாக கட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்த வீட்டை மறுசீரமைப்பு செய்துள்ளனர்.
இந்த வீட்டில் இருக்கும் அறைகள் நல்ல வசதியாக இருக்கிறது. மேலும் வீட்டிற்குள் குளிர் தாங்க கூடிய வகையில் கூரைகள் பீம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வீட்டின் குளியலறை, சமையல் அறையில் மின்சார உபகரணங்கள், பிளம்பிங் என்று அனைத்தும் நவீன முறைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த வீட்டின் அருகிலும் எந்த வீடுகளும் கிடையாது. எனவே, இந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.