பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, பேராசிரியர் காலனி, சாஸ்திரி நகர், காசுக்கடை பஜார், என் .ஜி. ஓ. காலனி வலையங்குளம், நக்கிக்கொண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகம் துண்டிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.