Categories
தேசிய செய்திகள்

பென்சன் தாமதமா வருதா?…. இனி கவலையை விடுங்க…. எக்ஸ்ட்ரா பணம் கிடைக்கும்…. சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி தேதிக்குள் பென்சன் வரவில்லை என்று புகார் பெறப்பட்டது. இதனையடுத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சுற்றறிக்கையை ஒன்றை வெளியிட்டது. அதில், ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் கடைசி நாளுக்குள் பென்சன் வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் போய் சேர வேண்டியதற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே பென்சன் விநியோகிக்கும் வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பென்சன் வழங்குவதை பொறுத்தவரை அனைத்து PF அலுவலகஙளும், வங்கிகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் ஓய்வூதியதாரர்களுக்கு கடைசி தேதிக்குள் பென்சன் கிடைக்கும் என்று EPFO தெரிவித்துள்ளது.

பென்சன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் வருடத்துக்கு 8 சதவீதம் என்ற நிலையான வட்டிக் கணக்கில் நிலுவைத் தொகைக்கு வங்கிகள் இழப்பீடு செலுத்த வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிமுறை ஆகும். இந்த இழப்பீட்டுத் தொகையானது ஓய்வூதியதாரரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். உரிய தேதிக்குள் பென்சன் கிடைக்காமல் தாமதத்தை சந்தித்து வந்த ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அறிவிப்பு நிம்மதியை அளித்துள்ளது. இனிமேல் பென்சன் பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதற்கு ஏற்ப இழப்பீடும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |