இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் உயிரிழந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்பீம் நகர் பகுதியில் ஏகாம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஏகாம்பரம் தேன்மொழியை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருக்கும் போது தாமல் தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகில் சென்ற நிலையில் அரசுப் பேருந்து திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஏகாம்பரம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.