Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாக்காளர் தின நிகழ்ச்சி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…. விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர்….!!

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பரிசுகளை  வழங்கியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், அரும்பு கோட்டை ஆர்.டி.ஓ .கல்யாணகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் மாரிச்செல்வி, மற்றும் பள்ளி கல்லூரிகள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி 20 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை மற்றும் வாக்காளர் சுருக்க திருத்த பணிகளில்  சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகளை வழங்கினார். அதன்பின் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து மாணவ- மாணவிகளுக்கு  சிறப்புரை ஆற்றியுள்ளார்.

Categories

Tech |