கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் கொடூர வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் காயமடைந்திருக்கிறார்.
கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் இருக்கும் சிங்ரூ அவென்யூ என்ற பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டு பல கட்டிடங்கள் கடும் சேதமடைந்து இருக்கிறது. இதில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒரு கட்டிடத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்த சுமார் பதினெட்டு தீயணைப்பு வீரர்களும், 7 தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் பல மணி நேரங்களாக போராடித்தான் தீயை அணைத்திருக்கிறார்கள். வெடி விபத்து ஏற்பட என்ன காரணம்? என்று தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.