Categories
மாநில செய்திகள்

பேரணி மட்டும் இல்ல… இது ஒரு போர் அணி… ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று நடந்தது ‘பேரணி மட்டும் இல்லை இது ஒரு போர் அணி என்று முக ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. பேரணிக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை மீறி நடைபெற்றால் அதை வீடியோ பதிவு எடுக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பிரம்மாண்ட பேரணியை நடத்தியது.

இதில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ப சிதம்பரம் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் எல்.பி.எஃப், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட பல்வேறு அமைப்பினரும் பங்கேற்றனர்.

தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து தொடங்கிய இந்த பேரணி 11: 30 மணியளவில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. பேரணி நிறைவில் முக ஸ்டாலின் மத்திய மாநில அரசை எச்சரிக்கும் விதமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது,  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று நடந்தது ‘பேரணி மட்டும் இல்லை இது ஒரு போர் அணி என்று கூறினார். ஸ்டாலினின் இந்த பேச்சை கூட்டணி கட்சிகள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும்வரை  திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கும் விதமாக பேசினார்.

 

Categories

Tech |