அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு ஹெச்.ராஜா வாக்கு சேகரித்தது கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உறவினரான கிரிகணேஷை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அகில இந்திய அளவில் மக்கள் தொடர்பு இயக்கம், மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தொடங்க இருக்கிறது. இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் இந்திய குடியுரிமை சட்டத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை என்று ஒரு மாத காலம் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏறபடுத்த உள்ளோம். அப்போது இச்சட்டம் குறித்து ஸ்டாலினுக்கும் புரியவைப்போம்’ என்றார்.
மேலும், அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து வரும் நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு ஹெச்.ராஜா வாக்கு சேகரித்தது கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.