Categories
உலக செய்திகள்

ஓமன் அகழ்வாராய்ச்சி… 4,000 ஆண்டு பழமையான வீடுகள் கண்டுபிடிப்பு…!!

4,000 ஆண்டு பழமையான வீடுகள் ஓமனின் ஒரு பகுதியான ருஸ்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஓமன் நாட்டின் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி வேலைகள் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியான ருஸ்தாக்கில் உள்ள காபூஸ் பல்கலைக்கழகமும், இத்தாலி பல்கலைக்கழகமும் இணைந்து அகழ்வாராய்ச்சி பணியினை மேற்கொண்டு வருகிறது .

இதில் 4,000 ஆண்டுகள் தொன்மையான வீடுகள், இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்கள் முதலியன கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவை பழங்கால வெண்கலக் காலத்தை சேர்ந்ததாக இருக்கும் என ஆய்வில் தெரிய வருகிறது. மிக தொன்மையான இப்பகுதியில் முதன்முறையாக ஆய்வில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தொன்மையான மக்களின் வாழ்க்கை முறை, மக்கள் பயன்படுத்திய ஆடை, அவர்களின் ஆபரணங்கள் மற்றும் பாரம்பரியம் உள்ளிட்டவை தொடர்பாக  பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |