Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சகோதரனை காதலித்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலித் தொழிலாளி தனது 2 மனைவிகளுடன் வசித்து வருகிறார். இதில் முதல் மனைவிக்கு 4 குழந்தைகளும், 2-வது மனைவிக்கு ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் முதல் மனைவியின் 4-வது மகளான 16 வயது சிறுமி 2-வது மனைவியின் மகனான 16 வயது சிறுவனை காதலித்து வந்துள்ளார். இந்த முறை தவறிய காதலுக்கு பெற்றோரும், உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |