Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எல்லாமே எப்படி இருக்கு? ஆய்வு செய்த அதிகாரிகள்.. பிரம்மிக்க வைத்த ராஜகோபுர மூலிகை ஓவியம்..!!

நேற்று தொல்லியல் துறை அதிகாரி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள ராஜகோபுர மூலிகை ஓவியங்களை ஆய்வு செய்தார்.

தமிழக அரசு பழமையான 50 கோவில்களை தேர்வு செய்து கோவில்களில் உள்ள ராஜகோபுரம் மற்றும் கோபுரங்களின் உள் பகுதியில் வரையப்பட்டிருக்கும் மூலிகை ஓவியங்களை புனரமைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் பிரசித்தி பெற்ற குமரி மாவட்ட சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் மற்றும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்வு செய்யப்பட்டது.தாணுமாலய சாமி ராஜ கோபுரத்தின் உட்பகுதியில் ஏழு அடுக்குகளிலும் காணப்படும் ராமாயணம் மற்றும் மகாபாரத இதிகாசங்களை விளக்கும் மூலிகை ஓவியங்கள் கடந்த 2015-ஆம் ஆண்டில் ரூ.81 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ராஜகோபுரத்தில் உள்ள மூலிகை ஓவியங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஓவியங்கள் எவ்வாறு உள்ளது ஓவியத்தின் தரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது  கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் தேவசம் பொறியாளர் ராஜ்குமார் மற்றும் ஒப்பந்ததாரர் ராஜன் ஆகியோருடன், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் வீரராகவன், இந்த ஓவியங்களில் எந்தவிதமான சேதமும் இல்லை என்றும் ஓவியத்தின் தன்மை மாறாமல் அப்படியே உள்ளதாகவும், ஓவியத்தின் மீது காற்று படும்படி கதவுகள் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும் என்று ஆய்வின் போது கூறினார்.

Categories

Tech |