டாஸ்மார்க் மேற்பார்வையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பத்திரக்கோட்டை பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது பற்றி அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.