Categories
அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகுமா….? பிரதமர் மோடியின் பேட்டி…!!

இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்தநாள் இந்தியாவில் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, “1950ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்திய தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்தி அதன் நற்பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது. தேர்தல் கமிஷன் தொடங்கப்பட்ட 1951- 52 ஆம் வருடங்களில் வாக்குப்பதிவு 45 சதவீதமாக இருந்தது. தற்போது வாக்குப்பதிவு 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனாலும் மீதமுள்ள வாக்குகளின் ஏன் அளிக்கப்படவில்லை என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கல்வியில் மேம்பட்ட பகுதிகள் மற்றும் நகர்புற பகுதிகளிலும் கூட 67 சதவிகிதம் என்ற அளவிலேயே வாக்கு பதிவாகிறது. இதற்கான காரணம் குறித்து நாம் கண்டறிய வேண்டும். பாஜக தொண்டர்களும் கள பணியாளர்களும் 75 சதவீதம் வாக்கு பதிவு உண்டாவதற்கான முழு முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணியை கட்டாயம் செய்ய வேண்டுமென கூறப்பட்டிருந்தது. இது தேர்தலில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். அடிக்கடி தேர்தல் நடைபெறுவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதுதான் சரியாக இருக்கும் என நான் கருதுகிறேன்.!” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |