Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. 9 மாநிலங்களில்…. மத்திய அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல் ஒரு சில இடங்களில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தொலை மருத்துவ ஆலோசனையை விரிவுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.

காஷ்மீர், இமாசலபிரதேசம், பஞ்சாப், சண்டிகர், உத்தரகாண்ட், அரியானா, டெல்லி, லடாக், உத்தரபிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார மந்திரிகள், உயர் அதிகாரிகள் கூட்டத்தை மத்திய அரசு காணொளி காட்சி வழியாக கூட்டி கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியது.

இதில் பங்கேற்று பேசிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “கொரோனாவால் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்துவோர் அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்வதற்கு வசதியாக தொலை தொடர்பு ஆலோசனை மையங்களை விரிவுபடுத்துமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் அறிவுறுத்தினார்.

Categories

Tech |