Categories
அரசியல்

“அவர் பேசுனது பாஜக கருத்து கிடையாது!”…. எடப்பாடிக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை….!!!!

சமீபகாலமாக அதிமுகவை ஓவர்டேக் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் அதிமுக குறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது எம்எல்ஏவும் பாஜக மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தில் அதிமுக இதுவரை ஒரு எதிர்கட்சி போல் செயல்படவில்லை. மேலும் அதிமுக மக்கள் பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் பேசுவது கிடையாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சி இல்லை என்றாலும் துணிச்சலோடு செயல்பட்டு வருகிறார். அதேபோல் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுக்கிறார். அதிமுக இரண்டு தவறுகளை கடந்த சட்டமன்ற தேர்தலில் செய்திருக்கிறது.

இல்லையென்றால் அதிமுக, பாஜக துணையோடு இந்நேரம் ஆட்சியைப் பிடித்திருக்கும். தமிழக சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. வருங்காலத்தில் பாஜக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இவ்வாறு பாஜக திடீரென அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவை கீழ்த்தரமாக பேசி இருப்பதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது பாஜகவுடைய தனிப்பட்ட கருத்து கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது வருத்தத்தை தெரிவித்ததாகவும் அண்ணாமலை கூறியிருக்கிறார். அதேபோல் அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |