Categories
தேசிய செய்திகள்

sexual harassment: HM செய்த காரியம்… மாணவர்கள் எடுத்த ஆக்சன்…. இதுவே தக்க பாடம்…!!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை மாணவர்கள் வீடியோ எடுத்து வசமாக மாட்டி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர் அங்கு படித்து வரும் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகள் இருக்கும் வகுப்பறைக்குள் சென்று தனக்கு பிடித்த ஏதாவது ஒரு மாணவியை தேர்ந்தெடுத்து ஏதாவது குற்றம் சாட்டி தனது வலையில் விழ வைத்துள்ளார்.

இதனை நோட்டமிட்ட அப்பள்ளி மாணவர்கள், ஆசிரியரை வசமாக மாட்டி விட வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளனர். அவ்வகையில் பட்டப்பகலில் தலைமை ஆசிரியர் மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும்போது அதை வீடியோவாக எடுத்து மாணவர்கள் அதிகாரிகளுக்கு அனுப்பியதோடு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இது வைரலானதைத் தொடர்ந்து விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இந்த சம்பவம் தக்க பாடமாக அமையும்.

Categories

Tech |