Categories
அரசியல்

“ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்த ஸ்கெட்ச்!”…. போலீசாரின் தீவிர வேட்டை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உட்பட அவரின் உதவியாளர்கள் பாபுராஜ், முத்துப்பாண்டி, பலராமன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய் நல்லதம்பி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து ஜாமீன் பெற்று வெளியிலும் வந்தார். இருப்பினும் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட மூன்று பேரும் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் ராஜேந்திர பாலாஜி உதவியாளர்களான பாபுராஜ் மற்றும் பலராமன் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |