ஐ.நா சபை உலகிலேயே மிக பெரிய அளவில் இயங்கும் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது.
இந்தியாவில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ம் தேதியிலிருந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இது, உலகளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 163 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரேஸின் செய்தி தொடர்பாளரான ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்திருப்பதாவது, தற்போது வரை உலகிலேயே மிகப்பெரிய அளவில் இயங்கும் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
மேலும், இந்த தடுப்பூசி திட்டம், ஆய்வுக்கூடத்தில் திறனை மேம்படுத்துவது, பதில் வழங்கும் திட்டங்களை உருவாக்குதல், வினியோகிப்பது, சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது, பலமான கண்காணிப்பு, சுயமாக பாதுகாப்பு கருவிகளை வாங்குவது, உயிர் காக்கக்கூடிய தகவல்களை பரப்புவது போன்றவற்றை உள்ளடக்கியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.