நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள “மும்பைக்கர்” திரைப்படம் ஓஓடியில் ரிலீஸாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் மாநகரம் கடந்த 2017ஆம் வெளியாகி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் சந்தீப் கிஷன், சார்லி, ராம்தாஸ், ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் நான்கைந்து இளைஞர்களின் பிரச்சனை மற்றும் அவர்கள் சந்திப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் “மும்பைக்கர்” என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது .
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பதும் அவர் நடிக்கும் முதல் பாலிவுட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த திரைப்படத்தை ஓஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் குழு முடிவு எடுத்துள்ளனர்.