Categories
சினிமா

“ஓஹோ! இது தா சங்கதியா…? தனுஷை அசிங்கமாக பேசிய ஐஸ்வர்யா…. நடிகைகளால் ஏற்பட்ட சண்டை..!!!

அமெரிக்காவில் வைத்து தனுஷை ஐஸ்வர்யா கேவலமாக பேசி சண்டையிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 10 நாட்களுக்கு முன் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் இருந்த பிரச்சனை ஒவ்வொரு நாளும் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும், இருவரும் மகன்களை கருத்தில் கொண்டு உங்களது முடிவை பரிசீலனை செய்யுங்கள் என்று ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எனினும் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை எல்லை மீறி சென்று விட்டதாகவும், இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்பதில் தனுஷ் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இடையில் உண்டான பிரச்சனை விவாகரத்து வரை செல்ல என்ன காரணம்? என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது நடிகர் தனுஷ் கடந்த வருடம், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். அப்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தன் மகன்களை அழைத்துக்கொண்டு அவருடன் சென்றிருக்கிறார். தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் இருந்த சமயத்தில், அவரின் மொபைல் ஐஸ்வர்யாவிடம் இருந்திருக்கிறது.

அப்போது நடிகைகள் சில பேரிடம் இருந்து தனுஷிற்கு அழைப்புகள் வந்திருக்கிறது. ஐஸ்வர்யா அழைப்பை ஏற்று, பேசியவுடன் அவர்கள் எந்த பதிலும் கூறாமல் அணைப்பை துண்டித்து விட்டார்கள். மேலும் அந்த நடிகைகளிடமிருந்து குறுந்தகவல்கலும் வந்திருக்கிறது. எனவே, கடும் கோபமடைந்த ஐஸ்வர்யா, தனுஷிடம், இப்போதும் நீங்கள் திருந்தவில்லையா? என்று கேட்டு சண்டையிட்டுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த தனுஷ், இனிமேல் நாம் சேர்ந்து வாழ்வது சரியாக இருக்காது என்று உறுதியாக கூறிவிட்டாராம். அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின் இருவருக்குமிடையே சண்டைகள் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சனை தான், தற்போது விவாகரத்து வரை செல்ல காரணமாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பே, நடிகர் தனுஷுக்கும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் இருவருடன் தொடர்பு உள்ளது என்று பேசப்பட்டது. மேலும் ஒரு தொகுப்பாளினியுடன் சேர்த்து தனுஷ் கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |