தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இதில் அனைத்து மனுக்களிலும் நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்றும் நீர்நிலைகளை பாதுகாக்க இதுகுறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்யக் கூடாது. ஆக்கிரமிப்பு இல்லை என்று அறிவிப்பு பெற வேண்டும். அவ்வாறு அறிவிப்பு இன்றி சொத்துவரி, மின், குடிநீர் இணைப்பு வழங்க கூடாது. அனுமதி கோரும் கட்டிடம் நீர்நிலைகளில் இல்லை என்று ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு ஒப்புதல் வழங்கி இருந்தால் அதிகாரிகள் மீது ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.