மாடர்னா தடுப்பூசி நிறுவனம் ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கும் பூஸ்டர் தடுப்பூசிக்கான சோதனையை தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, இதனை தடுக்கும் தடுப்பூசியை தயாரிக்கும் பணியை தடுப்பூசி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கும் வகையில் சிறப்பாக பூஸ்டர் தடுப்பூசி தயாரித்துக் கொண்டிருக்கிறது.
இத்தடுப்பூசியை பரிசோதிக்கும் பணியை தற்போது மேற்கொண்டிருக்கிறது. இதற்காக இரண்டு தவணை மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 600 மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.