Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த மகன் …. தந்தையின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

மகனை கிரைண்டர் கல்லால் அடித்து  தந்தை  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் மாரி -சித்திரைவேலு  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சித்திரைவேலுவிடம்  தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மாரி தனது வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லால் மகேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த  காவல்துறையினர்  மாரியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருக்கின்றனர்.

Categories

Tech |