Categories
அரசியல்

தடி மற்றும் செருப்பைக்கொண்டு அடி… சர்ச்சையாக பேசிய பாஜக எம்எல்ஏ…!!!

காணொலிக்காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதி, பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் நடத்தி வருகிறது. இந்நிலையில், கான்பூரின் பா.ஜ.க எம்எல்ஏவான மகேஷ் திரிவேதி, கித்வாய் நகரத் தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவர் தெரிவித்ததாவது, “இந்த சமயத்தில் ஒரு பக்கமாக பேசுபவர்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், கொடுங்கோலர்கள் போன்றவர்களை தடி மற்றும் செருப்பால் அடி, சுடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அவர் பேசிய வீடியோ ஆதரவாளர் ஒருவரால் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதாவது, பாஜக எம்எல்ஏவான மகேஷ் திரிவேதி, அதே தொகுதியில் களமிறங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரைத்தான் மறைமுகமாக தாக்கி பேசியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இவரின் கருத்திற்கு சமாஜ்வாதி கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

பா.ஜ.கவின் உண்மை முகம் மற்றும் குணம் இது தான் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவதாகவும் சமாஜ்வாதி கட்சி தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், மகேஷ் திரிவேதி சர்ச்சையாக பேசிய அந்த வீடியோவை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருவதாகவும், விதிமீறல் கண்டறியப்படும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கான்பூர் மாவட்டத்தின் தேர்தல் அலுவலரான நேகா சர்மா தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |