Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை சாப்பிடவே முடியல…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

ரேஷன் கடையில் தரமான அரிசியை வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஓதவந்தான்குடி கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த ரேஷன் கடையில் பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான பொருட்கள் குடியரசு தின விடுமுறையன்று வழங்கப்பட்டுள்ளது. அப்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வண்டுகளும், புழுக்களும் இருப்பதைக் கண்ட கிராம மக்கள் விரக்தியடைந்து அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களாகஇங்கு வழங்கப்படும் அரிசி மற்றும் பருப்புகளில் வண்டுகள் இருப்பதால் அதனை சமைத்து சாப்பிட முடியவில்லை என பொதுமக்கள் கூறியுள்ளனர். எனவே தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |