மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் கிராமத்தில் மோசஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூங்குடி கிராம பிரதான சாலை பகுதியில் ஒரு வாகனம் மூலமாக குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கொள்ளிடம் ப.ஜனதா ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனத்தை மீட்டு கொள்ளிடம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் கொரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற மதப்பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் மோசஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.