தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்றும் இதில் அரையாண்டு விடுமுறை முடிந்து 3ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
மேலும் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டடங்கள் இருந்தால் பொதுப்பணித் துறையின் உதவியுடன் இடிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கழிவறை, குடிநீர் தொட்டி போன்றவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் புதர்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவும் பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே அறிவுரை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.