Categories
அரசியல்

வெந்த புண்ணில் வேலை பாச்சாதீர்கள்…. இந்தியாவை அவமதிக்கும் செயல்…. இலங்கை அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்…!!!

இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதாக அறிவித்திருப்பது இந்தியாவை அவமதிப்பது போன்று இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 105 விசைப்படகுகளை அவர்களிடம் ஒப்படைக்காமல், இலங்கை அரசு அதனை ஏலம் விடப்போவதாக அறிவித்திருக்கிறது. இச்செய்தி, இந்திய மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

ஏற்கனவே, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா தாக்கம் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்நிலையில், எப்படியும் நம் படகுகள் நமக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த மீனவர்களுக்கு இலங்கை அரசு இவ்வாறு அறிவித்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இலங்கை அரசின் இந்த செயல் இந்தியாவை அவமதிப்பு போன்று இருக்கிறது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு அ.தி.மு.க சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய அரசு, இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தடுக்காவிடில் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக ராமேஸ்வரத்தின் மீனவர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசின் மூலம் மேற்கொள்ள வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு தமிழக அரசுக்கும் இருக்கிறது. இது தொடர்பில் முதல்வர், பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார். எனினும், ஏலம் விடுவதற்கு இன்னும் 15 நாட்கள் கூட இல்லை. எனவே மத்திய அரசிடம், தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, இலங்கை அரசாங்கத்தின், ஏலம் ரத்து செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் படகுகள் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |