Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

EXCLUSIVE: இதுதான் காரணம்…. மாணவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதாவது, என் மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே  இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்ற வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சையிலுள்ள நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி முன்னிலையில் மாணவியின் பெற்றோர் தங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பெறும் வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவியின் பெற்றோர் நீதிபதி முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இந்த நிலையில் மாணவி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் “எப்போதும் நான் தான் பள்ளியில் முதல் மதிப்பெண்ணை பெற்று வந்தேன். ஆனால் இந்த வருடம் குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு சரியாக செல்ல முடியவில்லை. இதனால் தாமதமாக போவேன். இதன் காரணமாக அங்குள்ள சிஸ்டர் என்னை கணக்கு பார்க்க சொல்வார்கள். இல்லை நான் படிக்க வேண்டும் என்று கூறினாலும் அவர்கள் என்னை விட மாட்டார்கள்.

இதையடுத்து நான் சரியாக எழுதினாலும் தவறு என்று கூறி 1 மணி நேரம் என்னை உட்கார வைத்து விடுவார்கள். இதன் காரணமாக நான் மதிப்பெண் குறைவாக எடுத்தேன். எனவே என்னால் படிக்க முடியாது என்பதால் விஷம் குடித்து விட்டேன். எல்லா வேலைகளையும் என்னை செய்ய சொல்வார்கள். நான் வீட்டுக்கு போக வேண்டும் என்று கேட்ட போதிலும் இங்கேயே இருந்து படி என கூறுவார்கள். இதனிடையில் பொட்டு வைக்கக்கூடாது என தன்னை யாரும் வற்புறுத்தவில்லை” என்று மாணவி கூறியுள்ளார்.

Categories

Tech |