நடிகர் தனுஷின் மூத்த மகன் தன் பெற்றோரின் விவாகரத்து தொடர்பில், கேட்ட ஒரு கேள்வியால், ரஜினிகாந்த் அதிர்ந்துபோனார்.
நடிகர் தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இத்தம்பதியருக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். எனவே, பிள்ளைகளுக்காக முடிவை மாற்றிக் கொள்ளுமாறு ரசிகர்களும், திரையுலகினரும் அறிவுரை கூறினர். இந்நிலையில், பெற்றோரின் விவாகரத்து மகன்கள் இருவரையும் அதிகம் பாதித்ததாக தெரிய வந்திருக்கிறது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் படப்பிடிப்புகளில் இருக்கும் சமயத்தில், ரஜினிகாந்த் வீட்டில் தான் மகன்கள் இருவரும் இருப்பார்களாம். தற்போதும் இருவரும் ரஜினிகாந்த் வீட்டில் தான் இருக்கின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் பேரன்கள் இருவரையும் அழைத்து, உங்கள் பெற்றோரை விரைவாக சேர்த்து வைத்து விடுவோம்.
அதுவரை இருவரும் யாரும் இருக்க விரும்புகிறீர்கள்? அப்பாவுடனா? அம்மாவுடனா? என்று கேட்டிருக்கிறார். இதற்கு சற்றும் எதிர்பாராத வகையில் யாத்ரா ஒரு கேள்வியை ரஜினிகாந்திடம் கேட்டிருக்கிறார். அதாவது, இதேபோன்று என் அப்பாவிடம், நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள்? அம்மாவுடனா? அல்லது அப்பாவுடனா? என்று கேட்டால் அவர் என்ன பதில் கூறுவார்.
இதே போன்று என் அம்மாவிடம் கேட்டால் அவர் என்ன பதில் கூறுவார்? எனக்கு இருவருடனும் சேர்ந்து இருக்கத்தான் விருப்பம் என்று கூறிவிட்டாராம். இதனைக் கேட்ட ரஜினிகாந்த் அதிர்ந்து போய் விட்டாராம். எனவே, ரஜினிகாந்த் மகன்கள் இருவருக்காக அவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று நினைக்கிறார்.