டோங்கா தீவுகளில் ஒன்றான பங்காய் பகுதியில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
டோங்கா தீவுகளில் ஒன்றான பங்காய் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பங்காயிலிருந்து வடமேற்குப் பகுதியில் 219 கிலோமீட்டர் தொலைவில் 14.4 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.