நடிகர் தனுஷ் நடித்திருக்கும் மாறன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பொல்லாத உலகம் என்று தொடங்கும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
நடிகர் தனுஷ், தற்போது மாறன் மற்றும் வாத்தி போன்ற படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் மூலமாக தனுஷ் நேரடியாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.
இந்நிலையில் தனுஷ் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் மாறன் திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘பொல்லாத உலகம்’ என்று தொடங்கும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பறை பெற்றுக் கொண்டிருக்கிறது.
Presenting you the mass anthem #PolladhaUlagam video song ft. The dashing @dhanushkraja from #Maaran 🔥https://t.co/YvIK60BcHs
Lyrics @Lyricist_Vivek
Rap @TherukuralArivu @karthicknaren_M @MalavikaM_ @AlwaysJani @SathyaJyothi_ @disneyplusHSTam— G.V.Prakash Kumar (@gvprakash) January 26, 2022
இதில் நடிகர் தனுஷின் நடனம், மைக்கேல் ஜாக்சன் போன்று இருப்பதாக கூறி ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும், இந்த பாடலில் இடம் பெற்றிருக்கும் வரிகள், தற்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு பதிலடி கொடுப்பது போன்று இருக்கிறது.