பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சமூகநீதி வரலாற்றில் சாதனை படைக்கப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்திலும், பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் வாயிலாக தான் சாதனையை பெற்றிருக்கிறோம் என்று கூறியுள்ளார். ஆனால் சமூக நீதிக்கான போராட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திமுக அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை.
நாடே அறிந்த உண்மை இதுதான். எனவே திமுக சமூகநீதிக்காக சாதனை புரிந்தது தாங்கள் தான் என்று பெருமை தேடிக் கொள்வதை நிறுத்த வேண்டும். பாஜக உருவாக்கி தந்துள்ள சமூகநீதிக்கு எந்த குழப்பத்தையும், சோதனையையும் ஏற்படுத்தாமல் இருந்தாலே அது திமுகவின் ஒரு சாதனை தான்” என்று நாராயணன் திருப்பதி தனது அறிக்கையில் பரபரப்பாக குறிப்பிட்டுள்ளார்.