ரயில் நிலையத்தில் தேசியக்கொடி கிழிந்த நிலையில் தொங்கியதால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருக்கும் 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை. இந்நிலையில் அதே சமயம் சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட தேசியக்கொடி இறக்கப்படாமல் கிழிந்த நிலையில் பறந்து கொண்டிருந்தது. இதனால் ரயில்வே நிர்வாகம் தேசியக் கொடியை அவமதித்து விட்டதாக கூறி சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இது பற்றி ரயில்வே நிர்வாகம் கூறியதாவது, தேசியக்கொடி ஏற்றி இறக்கும் மோட்டார் பழுது அடைந்ததால் தேசியக்கொடியை ஏற்ற முடியவில்லை. இருப்பினும் எது எப்படி இருந்தாலும் குடியரசு தினம் என்று வரும் பொழுது முன்னெச்சரிக்கையாக ரயில்வே நிர்வாகம் தேசியக்கொடியை ஏற்ற நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும். அதனால் உடனடியாக மோட்டாரை சரிபார்த்து கிழிந்த நிலையில் இருக்கும் தேசியக் கொடியை மாற்றி விட்டு தினமும் தேசிய கொடியை ஏற்றி இறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.