Categories
சினிமா

சமந்தா தான் விவாகரத்திற்கு காரணம்…. பிரபல நடிகரின் கருத்தால் பரபரப்பு…!!!

சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்து தொடர்பில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா வெளியிட்ட கருத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தெலுங்கு திரையுலகில்  பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகனான, நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2017-ஆம் வருடத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார்கள்.

இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து தொடர்பில், முதல் தடவையாக நாகார்ஜுனா பேசியிருக்கிறார். அவர், சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டதாக தெரிவித்துள்ளார். சமந்தாவும், சைதன்யாவும் நன்றாகத்தான் இருந்தார்கள். இரண்டு பேருக்கும்  எப்படி பிரச்சனை ஏற்பட்டது? என்று தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார்.

Categories

Tech |