Categories
தேசிய செய்திகள்

ஆதார் அப்டேட் பண்ணனுமா?…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்தியர்களுக்கு ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒரு அடையாள ஆவணமாக இருக்கிறது. ஆதார் இன்றி இந்தியாவில் எதுவும் கிடைக்காது என்ற நிலைமை கிட்டத்தட்ட வந்துவிட்டது. இதனால் அனைவரிடமும் கட்டாயம் ஆதார் கார்டு இருக்க வேண்டும். மேலும்  பிறந்த குழந்தைக்குக் கூட ஆதார் எடுக்கலாம். இறப்புச் சான்றிதழை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கிய ஆவணம். இவ்வாறு மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டும்.

ஆதார் கார்டில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வது எளிது ஆகும். ஆன்லைன் வாயிலாக அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே அப்டேட் செய்யலாம். ஆனால் மொபைல் நம்பரை அப்டேட் செய்வதற்கு மட்டும் ஆதார் சேவை மையத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டி இருக்கும். ஆதார் கார்டிலுள்ள மொபைல் நம்பர்தான் மிக முக்கியமானது ஆகும். அது இல்லையென்றால் மற்ற விவரங்களையும் அப்டேட் செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. இது சில பேருக்கு பிரச்சினையாக இருந்திருக்கும். ஏனென்றால் நிறையப் பேரிடம் ஆதாரில் உள்ள மொபைல் நம்பர் இருக்காது.

இந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டு உள்ளது. மொபைல் நம்பர் பிரச்சினை இனிமேல் இல்லை. அதாவது எந்தவொரு மொபைல் நம்பரை வைத்தும் இனிமேல் ஆதாரில் அப்டேட் செய்யலாம். இதற்கான வசதியை ஆதார் அமைப்பு (UIDAI) ஏற்படுத்தி இருக்கிறது. ஆதார் அப்டேட் செய்கையில் மொபைல் நம்பருக்கு வரும் OTP நம்பரைப் பதிவிட்டால்தான் வேலை நடக்கும். ஆகவே இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஒரே மொபைல் நம்பரை வைத்து குடும்பத்திலுள்ள அனைவரின் ஆதார் கார்டிலும் அப்டேட் செய்ய முடியும். ஆதார் ஆதெண்டிகேசனுக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |