தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு போன்ற சிறு தானியங்களை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு எடுத்து தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை, கோவை போன்ற மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கவும், சிறு தானியங்களின் மதிப்பை கூட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது