Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை இல்ல!”…. அரசு அதிகாரிகளின் செயலால்…. வேதனையடைந்த ரிசர்வ் வங்கி….!!!!

இன்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர்.

இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது கட்டாயம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்” என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்கவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அதிகாரி எஸ்.எம்.சாமி இந்த விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.எம்.சாமி தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்த போது அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாதது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.

Categories

Tech |