மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் சிறைக் கலவரங்கள் அடிக்கடி நடக்கும். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் 18 கைதிகள் கொல்லப்பட்டனர்.
16க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஹோண்டுராஸ் தீவில் சமீபத்தில் சிறை திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கிடையில் மீண்டும் கலவரம் நடந்தது. அந்த கலவரத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர். ஹோண்டுராஸ் நாட்டில் மொத்தம் 27 சிறைச்சாலைகள் உள்ளன.
இந்த சிறைச்சாலைகளில் மொத்தம் 22 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் ‘மரா’ என்ற கும்பல் அரசுக்கு எதிராக சாலைப் போராட்டம் மற்றும் வன்முறைகளை நடத்தி வருகின்றன. இதனால் அமைதியின்மை நிலவுகிறது.