Categories
சினிமா தமிழ் சினிமா

ஆபீஸிற்கு வருபவர்களை ஓடவிடும் விஷால்….. உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா…..?

ஆபீஸிற்கு வருபவர்களை தலைதெறிக்க விஷால் ஓடவிடுவதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. இதனையடுத்து, இவர் துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவில் சேர உள்ளாரா விஷால்? | vishal in bjp? - hindutamil.in

இந்நிலையில், இவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் பிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அவரை சந்திக்க வருபவர்களுக்கு அவர் சிறப்பு ஆபீஸ் ஒன்றையும் வைத்துள்ளார். இதையடுத்து, இந்த ஆபிசுக்கு இவரை சந்திக்க வரும் நபர்கள் அனைவரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

ஏனெனில் இவர் நாய் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் தற்போது கண்ணுகுட்டி அளவில் மூன்று நாய்களை வளர்த்து வருகிறாராம். இதனால் இவரை சந்திக்க வரும் நபர்கள் அந்த நாயை கண்டு பயந்து உள்ளே வர தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு வருபவர்கள் அந்த நாயை விஷால் கட்டி போட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அவர் கட்டி போடாமல் அப்படியே திரிய விடுவதாக கூறுகிறார்கள். ‘உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா?’ எனவும் விஷாலை திட்டி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |