Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியரசு தின விழா…. 140 போலீசாருக்கு பதக்கம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசிய  கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அதிகாரி மங்கலசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

அதன்பின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்பாக பணியாற்றிய 77 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் 140 காவலர்களுக்கு  பதக்கம் மற்றும்  2 முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு பராமரிப்பு தொகையான 25 ஆயிரத்திற்கான  காசோலையை   வழங்கி விழாவை  சிறப்பித்துள்ளார்.

Categories

Tech |