கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதாவது தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது அமலில் இருக்கும் வார இறுதி ஊரடங்கு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு நேர ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு கவர்னருக்கும், டெல்லி அரசுக்கும் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், “டெல்லியில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பதாகவும், வார இறுதி ஊடங்கு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி டெல்லியில் உணவகங்கள், தியேட்டர்கள், பார்கள் 50% திறனுடன் திறக்கப்படும். சுமார் 200 பேர் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே அடுத்த கூட்டத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளனர்.