மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல நடிகையான ஸ்வேதா திவாரி “ஷோ ஸ்டாப்பர்” என்ற வெப் சீரியலில் நடித்திருக்கிறார். இவர் அந்த வெப்சீரிஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது “கடவுள் எனது உள்ளாடையை அளவு எடுத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
அவர் பேசிய இந்த வார்த்தையானது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா இதுகுறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி நடிகை ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.