தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற பிளஸ் 1 மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருடைய மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய மகள் அருகிலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரமாகியும் மாணவி மீண்டும் வீடு திரும்பாததால் அவருடைய தாய் பதற்றமடைந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.