கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தேவராஜ் மனமுடைந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் தேவராஜ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி ஸ்டெல்லா மேரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவராஜை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.